வவுனியாவின் முதலாவது கின்னஸ் சாதனையாளரை நேரில் சென்று சந்தித்த பா.சத்தியலிங்கம்!!

515

கின்னஸ் சாதனை படைத்துள்ள வவுனியாவைச் சேர்ந்த பொறியியலாளர் கனகேஸ்வரன் கணேஸ்வரனுக்கு வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.சத்தியலிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கணேஸ்வரனின் வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வவுனியவைச் சேர்ந்த இளம்பொறியிலாளரான கனகேஸ்வரன் கணேஸ்வரன் உலகின் மிக நீளமான மின்சாரசுற்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனான இவர் மிருதங்க கலைஞர் கனகேஸ்வரன், வயலின் கலைஞர் சௌதாமணி தம்பதிகளின் புதல்வனாவார்.

மேலும், வவுனியா மாவட்டத்தின் முதலாவது கின்னஸ் சாதனையாளரை கௌரவித்தமையை பெருமையாக கருதுவதாக முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.