80 வயதான தந்தையை வீதியில் கைவிட்டுச் சென்ற மகன்!!

578

கதிர்காமம், கந்தசுரிந்துகம, ராஜமாவத்தை வீதியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு எதிரில் 80 வயதான முதியவரை அவரது மகன் கைவிட்டுச் சென்றுள்ளார்.

வயதான இந்த முதியவரை இன்று அதிகாலை 4 மணியளவில் அவரது மகன் குறித்த இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

மகனுடன் முச்சக்கர வண்டியில் வந்த இந்த முதியவரை இறக்கி விட்ட அவரது மகன், தான் வரும் வரை அங்கு இருக்குமாறு கூறி சென்றதாக முதியவர் பிரதேசவாசிகளிடம் கண்ணீருடன் கூறியுள்ளார்.

இளமை காலத்தில் கமத்தொழில் செய்து வந்துள்ள இந்த முதியவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருப்பதாகவும் விவசாயம் செய்து தாம் அவர்களை வளர்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிந்திக்கும் திறன் குறைந்து காணப்படும் முதியவர் தனது மகன் திரும்பி வரும் வரை எரிபொருள் நிலையத்தில் காத்திருந்த போதிலும் சென்ற மகன் திரும்பவில்லை.

பிரதேசவாசிகள் முதியவர் குறித்து கதிர்காமம் வைத்தியசாலை மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். கதிர்காமம் வைத்தியசாலை அதிகாரிகள், முதியவரை கதிர்காமம் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.