கனடாவில் இலங்கை தமிழர்கள் இருவர் உட்பட்ட 8 பேரின் தொடர் கொலைகள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் காணிகளில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கனேடிய டொரன்டோ பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தேடுதல் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2010ஆம் ஆண்டு முதல் கனேடியரான புரூஸ் மெக்ஆத்தர் என்பவர் 8 கனடாவுக்கு குடியேறிகளாக சென்ற இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட 8 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 23ஆம் திகதி நடைபெறும்போது மெக்ஆத்தர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதற்கு மத்தியிலேயே அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான டொரன்டோ நகரின் இடம் ஒன்றில் தோண்டுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது நேற்று பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டு அவை இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.