வவுனியாவில் இன்று காலை 7 மணியளவில் சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் மாடு அறுத்து இறைச்சியாக்கிய அதனை விற்பனை செய்வதற்கு முயன்றபோது சம்பவ இடத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று (06.07) காலை 7மணியளவில் பட்டக்காடு பகுத்தியில் உள்ள வீதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் அறுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் அப்பகுதியைச் சுற்றிவளைத்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்த சந்தேக நபர் ஒருவருடன் பெருமளவு இறைச்சியையும் பொலிசார் மீட்டுள்ளதாகவும் இப்பகுதியில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதும் தற்போது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சிகளையும் சந்தேக நபரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.