மகளை காப்பாற்ற போராடிய தந்தை வெட்டிக் கொலை : வெளிவந்துள்ள புதிய தகவல்!!

526

அநுராதபுரம் – வன்னியகுளம் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருடன், மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை கைது செய்ய 8 பொலிஸ் குழுக்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் – விஜயபுர பிரதேசத்தில் வசித்து வந்த 45 வயதான வர்த்தகர் கடந்த 5ஆம் திகதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு தரப்பிற்கும் இடையில் நீண்டகாலமாக பகை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கொலை செய்யப்பட்டவரின் மகளை சந்தேகநபர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயற்சித்த போது தந்தையான வர்த்தகர் சந்தேகநபரை தாக்கியுள்ளார்.

இதற்கு பழிவாங்கும் நோக்கில் 45 வயதான சுஜீவ குமார என்ற வர்த்தகரை கொன்றதாக கூறப்படுகிறது. மேலும் சந்தேகநபரின் மூன்று பிள்ளைகளையும் கொலை செய்ய போவதாக சந்தேகநபர்கள் குடும்பத்தினரை அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் அரசியல்வாதி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக உறவினர்கள் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.