ராஜஸ்தானில் காதல் ஜோடி நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே உள்ள பகால் என்ற கிராமத்தில் பழங்குடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு தரூ காம்தி என்ற நபருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு அதேபகுதியை சேர்ந்த ராம்லால் காம்தி என்ற நபருடன் காதல் இருந்து வந்துள்ளது.
இதை தெரிந்துகொண்ட தரூ ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், இருவரது திருமணம் முறிக்கப்பட்டதாக பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் சம்மந்தப்பட்ட இளம்பெண் தனது காதலரையே திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர்.
ஒரு நாள் இதனை பார்த்த முன்னாள் கணவர் தரூ காம்தி, அந்த இளம்பெண்ணை பழிவாங்க நினைத்து ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இதனை விசாரித்த பஞ்சாயத்து தாரர்கள், இருவரையும் நிர்வாணமாக்கி கட்டி வைத்து அடித்ததோடு, ஊர்வலமாகவும் அழைத்து சென்றனர்.
இதனை ஒரு சில நபர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்கு பின்னர் 5 பேரை கைது செய்துள்ளனர்.