வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சியினை முடித்து வெளியேறிய மாணவர்கள், தாம் புதிதாக தொழில் ஒன்றினைத் தொடங்கவிருப்பின் அல்லது ஏற்கனவே தொழில் ஒன்றை ஆரம்பித்து நடாத்திச் செல்லும் மாணவர்கள் தமது தொழிலை விருத்தி செய்யவிருப்பின் இத்திட்டத்தின் கீழ் இணைந்து கொள்ளமுடியும்.
நிகழ்ச்சித்திட்டம் : சுயதொழில்முயற்சியாண்மைக் கடன் வழங்கும் திட்டம்(SEPI)
பயனாளிகள் : 40 வயதிற்குட்பட்ட முழுநேர மற்றும் பகுதிநேர மாணவர்கள்
காலம் : 16 – 28.09.2018 (12 நாட்கள்)
இடம் : யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பண்ணை, புளியங்குளம்.
இணையவிரும்பும் மாணவர்கள் தமது பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை இல, தொலைபேசி இல மற்றும் செய்யவுள்ள அல்லது செய்கின்ற தொழில் போன்ற விபரங்களை 17.07.2018 ற்கு முன்பதாக [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்திலோ வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இத்திட்டமானது வவுனியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் முன்னெடுக்கப்படவுள்ளது என்பதனை கருத்தில் கொள்ளவும்.
மேலும் 12 நாட்பயிற்சி முடிவில் வியாபார முன்மொழிவுத் திட்டமானது தயாரிக்கப்பட்டு வங்கிகளிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் அதன் பிற்பாடு பின் தொடர்நடவடிக்கைகள் வவுனியா மாவட்டச் செயலகத்தினால் தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்தை நாடவும்.
தொடர்புகட்கு:
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
நெளுக்குளம்,
வவுனியா
024 222 3664, 024 222 6720, 024 205017