இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியோடு கண்ணீருடன் வலம் வரும் தாய் குரங்கு : மனதை உருக்கும் புகைப்படம்!!

606

தமிழகத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியை கீழே இறக்காமல் கண்ணீரோடு தாய்க் குரங்கு அப்பகுதியில் சுற்றி வருவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது.

சென்னை வேலூர் மாவட்டம் ஆம்பூர் காந்தி ரோட்டில் தீயணைப்பு நிலையம் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டித்தின் மீது கடந்த ஞாயிற்று கிழமை தாய் குரங்கு ஒன்று இறந்த குட்டியுடன் அமர்ந்திருந்தது.

அதன் அருகில் இன்னும் பல குரங்குகள் அமர்ந்திருந்தன. அப்போது அந்த தாய் குரங்கு குட்டி குரங்கை பார்த்து வேதனையோடு கண்ணீர் வடித்ததுடன், இறந்த குட்டியுடன் அந்த குரங்கு பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிகின்றது.

ஒரு நொடிகூட தனது இறந்த குட்டியின் சடலத்தை விட்டு பிரியாமல் இருக்கும் தாய் குரங்கின் செயல் அப்பகுதியில் இருக்கும் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

மேலும் இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.