வவுனியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு!!

426

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புனர்வு செயலமர்வு வவுனியா இரண்டாம் குறுக்தெருவில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் அலுவலகத்தில் இன்று (21.07.2018) காலை 10.30 மணி தொடக்கம் 13.30மணி வரை தமிழ்தாய் இளைஞர் கழகத் தலைவர் வ.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இக் கருத்தமர்வில் தகவல் உரிமைச்சட்டம் என்றால் என்ன? இதன் மூலம் எவ்வாறான சமூகத்தில் இருள் போர்வைக்குள் இருக்கும் விடயத்தை சட்டபூர்வமாக எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்று பல விடயங்களையும் விளக்கங்களையும் வளவாளர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

நீங்கள் இலங்கை அரசின் அமைச்சு ஒன்றிடமிருந்து ஒரு குறித்த அபிவிருத்தி திட்டமொன்றிற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் பெறுமதி அதனால் நடந்தேறிய அபிவிருத்தி பற்றிய விபரங்களை கேட்டுப் பெறும் உரிமை உங்களுக்கு சட்ட ரீதியாக தரவேண்டும் என்ற பல விளக்கங்கள், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் , இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.