தீராக்காதல் : இறந்துபோன மனைவியை சிலையாக வடித்து 2 மணிநேரம் பேசும் கணவர்!!

788

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறந்துபோன மனைவிக்கு சிலை வடித்து தினமும் அவருடன் 2 மணி நேரம் பேசுவருகிறார் கணவர் ஆசைத்தம்பி.

தனது காதல் வாழ்க்கை குறித்து ஆசைத்தம்பி கூறியதாவது, 1977 ஆம் ஆண்டு எனது மாமன் மகள் பெரியபிராட்டிக்கும் எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சென்னைக்கு குடியேறினோம்.

எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மனைவியின் வழிகாட்டுதலின்படி மளிகைக் கடை நடத்தினேன். கேபிள் டி.வி தொடங்கவும் அவர்தான் ஆலோசனை கூறினார்.

உடனே அந்தத் தொழிலிலும் ஈடுபட்டேன். கைநிறைய வருமானம் வந்தது. அவர் விருப்பப்படி இடம் வாங்கி வீடு கட்டினேன். எனக்கு எல்லாமே என் மனைவிதான். அவர் சொல்வதுதான் எனக்கு வேதவாக்காக இருந்தது.

என்னை அன்போடு வழிநடத்தினார். இந்நிலையில் தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. படுக்கையில் இருந்தபோதும், நான் உங்களுடன் தான் இருப்பேன் என எனக்கு ஆறுதல் கூறினார். ஆனால், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார்.

பெரிய பிராட்டி அம்மாள் இறந்து 16-வது நாளன்று சிலை வடிக்கும் முயற்சில் ஈடுபட்டோம்.

5 அடி, ஓர் அங்குல உயரத்தில் சிலை உருவானது, அவர் இறந்த பத்தாவது மாதத்தில் சிலையை நிறுவினோம். சிலை வடிவத்தில் என்னோடும் என் குழந்தைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

தினமும் அவரோடு இரண்டு மணி நேரம் பேசிவருகிறேன். சிலை வந்தபிறகு எனக்குப் பத்து வயது குறைந்ததுபோல உள்ளது என்கிறார் ஆசைத்தம்பி.