வவுனியாவில் வான் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

614

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மீது வான் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (26.07) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் வேகமாக வந்த வான் அதன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியநிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.