வவுனியா A9 வீதி புதூர் சந்திக்கு அருகில் இன்று மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்தும் அதே திசையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டிமீது மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த (09) ஒன்பது பாடசாலை மாணவர்களும் காயமடைந்த நிலையில் புளியங்குளம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மாணவியொருவர் கவலைக்கிடமான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளனர் .
வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.