சமயகுரவர்களால் பாடல் பெற்ற சிவ குகஸ்தலங்கள் நிறைந்த இலங்காதீபத்தின் வடபால் வவுனியா கோவிற்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை வேண்டி அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் அம்பாளுக்கு நிகழும் விளம்பி வருஷம் தட்சணாயம் ஆடி மாதம் பத்தொன்பதாம் நாள் (04.08.2018) சனிக்கிழமை சப்தமி திதியும் அஸ்வினி நட்சத்திரமும் கூடிய சுப தினத்தன்று பகல் 12.00 மணிக்கு துவஜாரோகணமாகி கொடியேற்றம்) ஆடி மாதம் 28ம் நாள் (13.08.2018) திங்கட்கிழமை பூர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறத் திருவருள் கைகூடி உள்ளதால் அடியார்கள் யாவரும் வந்து தரிசித்து அம்பாளின் இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இக்காலங்களில் அடியார்கள் வந்து தரிசித்தும் தங்களால் இயன்றளவு சரியைத் தொண்டுசெய்து, பூ, பூமாலைகள், பால், தயிர், இளநீர் முதலியன தந்துதவி எம்பெருமாட்டியின் திருவருளைப் பெற்று உய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
கோவில்குளம் – வவுனியா.
ஆலய அறங்காவலர்களும் உபயகாரர்களும்
024-2222651
திருவிழா விபரம்
(03.08.2018) வெள்ளி மாலை விநாயகர் வழிபாடு, அனுஞ்ஞை , கிராமசாந்தி, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணம் |
மாலை – யாகாரம்பம்
01 ஆம் திருவிழா கொடியேற்றம் (04.08.2018 சனி)
உபயம்: சிவத்திரு. சி. இளந்தனையசிங்கம் குடும்பம்.
02 ஆம் திருவிழா (05.08.2018 ஞாயிறு)
உபயம்: திரு. வே.இராமச்சந்திரன், திரு.K.குகதாசன், N.K.திருச்செல்வம் குடும்பம், K.தவலிங்கரட்ணம் குடும்பம்,திரு. வே.ஜெபநேசன் குடும்பம், திரு. R.மாதவன் குடும்பம், திரு. மு. சிவதர்சன் குடும்பம், திரு. வே. கணாதீஸ்வரன் குடும்பம்
03 ஆம் திருவிழா (06.08.2018 திங்கள்)
உபயம்: திரு. க. இளையதம்பிகுடும்பம், திரு. பா.சசிகரன் குடும்பம், திரு. கே. பிரபாகரன் குடும்பம்.
04 ஆம் திருவிழா (07.08.2018 செவ்வாய்)
உபயம்: திருவாளர் லீலா அரிசி ஆலை
05 ஆம் திருவிழா (08.08.2018 புதன்)
உபயம்: சிவத்திரு. ஆ. கனகலிங்கம் குடும்பம்
06 ஆம் திருவிழா (09.08.2018 வியாழன்)
உபயம்: திரு. வே. சரவணபவராஜா குடும்பம்
07 ஆம் திருவிழா (10.08.2018 வெள்ளி) மாலை வேட்டைத்திருவிழா
உபயம்: திரு. சரவணமுத்து குடும்பம், திரு. சீ. சிவதாசன் குடும்பம், திரு. சாந்தலிங்கம் குடும்பம்
08 ஆம் திருவிழா (11.08. 2018 சனி) மாலை முத்துச்சப்பறத்திருவிழா
உபயம் : திரு. உ.உதயசங்கர் குடும்பம்
09 ஆம் திருவிழா 12.08.2018 ஞாயிறு) தேர்த்திருவிழா
உபயம்: திரு. நா.அம்பலவாணர் குடும்பம்
10 ஆம் திருவிழா (13.08.2018 திங்கள்)தீர்த்தோற்சவம்
யாககும்ப அபிஷேகம், சதுர்ஷ்டி (64) |உபசாரத்துடன் பூரகர்மா மாலைதிருவூஞ்சல்துவஜாவரோகணம்,மௌனோற்சவம்,சண்டேஸ்வரி உற்சவம், ஆச்சாரிய உற்சவம்
உபயம்: சிவத்திரு குலதேவராசா குடும்பம்
11 ஆம் திருவிழா வைரவர் பொங்கல் (14.08.2018 செவ்வாய் பிராயச்சித்த அபிஷேகம்
உபயம்: திரு. சிவஞானம் குடும்பம்,.
அமுதசுரபியினால் தினசரி அன்னதானம் வழங்கப்படும் .