இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றி : தொடரை சமன் செய்தது!!

311

SLநியூஸிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

தம்புள்ளையில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 132 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த வேளை மழை குறுக்கிட்டது.

இதனால் போட்டி 33 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து, 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் திலகரட்ன டில்ஷான் 53 ஓட்டங்களையும், மஹெல ஜெயவர்த்தன 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பின்னர் 216 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 25 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை எடுத்திருந்த போது, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி இலங்கை வசமானது.

இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 1-1 என சமப்படுத்தியுள்ளது.