விமான நிலையத்திலிருந்து யாழ். சென்ற வாகனம் கோர விபத்து : இருவர் பரிதாபமாக பலி : தொடரும் அவலம்!!

662

கிளிநொச்சி ஏ9 வீதி, இயக்கச்சி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முறையற்ற விதத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சாரசபையின் வாகனத்தின் பின் பகுதியில், கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ். நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த 8 பேரை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி சென்ற போது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் வந்த 8 பேரும் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஒருவரும் கிளிநொச்சி கொண்டு சென்ற ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். ஏனைய ஆறு பேரும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.