துப்பாக்கி முனையில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!!

663

abuseகளுத்துறை தெற்கு பகுதியில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6ம் திகதி இரவு வீடொன்றினுள் புகுந்த குறித்த இளைஞர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இதன்படி நேற்றையதினம் வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் வசமிருந்து துப்பாக்கி, ரவைகள், கையடக்கத் தொலைபேசி, கைக்குண்டு, ரப்பர் முத்திரை, கத்தி உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.