வவுனியாவில் நடைபெற்ற தீப்பந்த போராட்டம்!!(படங்கள், வீடியோ)

367

காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி வவுனியாவில் தீப்பந்த போராட்டம் நடைபெற்றது. வவுனியா மாவட்ட காணாமல் போனவர்களை தேடும் உறவுகள் சங்கமும், பிரஜைகள் குழுவுமே இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றது.

வவுனியா, கந்தசுவாமி கோவில் வீதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

கார்த்திகை தீப தீருநாளான இன்று இடம்பெற்ற இத் தீப்பந்தம் ஏந்திய போராட்டத்தில் காணாமல் போனேரின் உறவுகள் பங்கேற்று அரசியல் கைதிகளை விடுதலை செய். கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே, கொலைகார பூமியில் கொமன்வெல் மாநாடா, வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, எங்கள் வீடுகளை எம்மிடம் தா, காணாமல்போனவர்கள் தொடர்பில் பதில்சொல், சர்வதேச விசாரணை தேவை என கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை எனக்கு அப்பாவை பார்க்க ஆசையாக உள்ளது, அப்பாவை காட்டுங்கள். எனக்கு எனது அண்ணாவை பார்க்க ஆசையாக உள்ளது அண்ணாவை விடுவியுங்கள், ஸ்ரீலங்கா அரசே நீ கடத்திச் சென்றவர்கள் எங்கே போன்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா. செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வட மாகாணசபை அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம், உறுப்பினர்களான வைத்தியகலாநிதி சி. சிவமோகன், எஸ். ரவிகரன். ஜி. ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, இ. இந்திரராசா ஆகியோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் உட்பட தமிழர் விடுதலைக்கூட்டியின் வன்னி தொகுதி தலைவர் இரா.இராஜகுகனேஸ்வரன், பிரஜைகள் குழுவின் தலைவர் கே.தேவராசா, பிரஜைகள் குழுவின் காப்பாளர் சண் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

1 2 3 4 5 6