நம்பமுடியாத உண்மை : வானில் பறந்து பிரமிப்பை ஏற்படுத்திய மனிதன் : வைரலாகும் வீடியோ!!

478


கோயம்புத்தூரை சேர்ந்த விக்னேஷ் பிரபு என்ற நபர் உபகரணங்கள் ஏதுமின்றி வானில் பறந்த வீடியோ வைரலாகியுள்ளது.இவர் கடந்த 15 ஆண்டுகளாக மேஜிக் ஷோ நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலான மேஜிக் போட்டிகளிலும் கலந்து கொண்டு உள்ளார்.

இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், வானில் பறந்துள்ளார். இந்த அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது,மன ரீதியாகவும் இதுபோன்று பறக்க முடியும் எனக் கூறுகிறார் விக்னேஷ் பிரபு. குறிப்பாக தான் இதற்காக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சியில் ஈடுபட்டதாகவும், வானில் பறப்பது இந்தியாவில் இதுவே முதன்முறை எனவும் கூறியுள்ளார்.மேலும் முற்றிலும் பொழுது போக்குக்காகவே இதனை செய்ததாகவும், எனவே இதனை யாரும் ஆராய வேண்டாம் எனவும், யாரும் செய்து பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார்.