வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார கந்தனின் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை (16) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 09 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையாருக்கு அபிசேங்களும்,ஸ்ரீமுருகப்பெருமானுக்கு உரிய மந்திரங்கள் ஆராதனைகளும்,என்பன வசந்த மண்டபத்தில் இடம்பெற்றது.
பின்னர் 10 மணி சுபநேரத்தில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.பின்னர் கொடிமரத்திற்கான கிரிகைகள் என்பன இடம்பெற்று அங்கு பக்தர்களின் அரோகரா கோசத்துடன் எம்பெருமான் சமேதர உள்வீதி வலம் வந்தனர்.








