நியூஸிலாந்துக்கு எதிரான இலங்கை 20-20 அணி!!

253

New-Zealand-v-Sri-Lankaநியூஸிலாந்துக்கு எதிரான 20க்கு இருபது போட்டியில் ரமித் ரம்புக்வெல மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் ரமித் ரம்புக்வெல அறிமுகப்படுத்தப்பட்டார். எனினும் அவர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சீக்குகே பிரசன்ன இலங்கை சார்பில் ஒன்பது சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்டவீரர் திமுத் கருணாரத்ன, நடுத்தர துடுப்பாட்ட வீரர் அசான் பிரியன்ஞன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஆகியோர் இந்தப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இன்று இடம்பெறப் போகும் போட்டியில் களமிறங்கும் இலங்கை வீரர்கள்:

தினேஷ் சந்திமல் (தலைவர்), குமார் சங்கக்கார, லசித் மலிங்க, மஹெல ஜெயவர்த்தன, திலஹரத்ன டில்ஷான், குஷால் பெரேரா, அஞ்சலோ மெத்தியூஸ், லகிரு த்ரிமானே, சஜித்திர சேனாநாயக்க, அஜந்த மென்டிஸ், சீக்குகே பிரசன்ன, ரமித் ரம்புக்வெல, சுரங்க லக்மல், திஸர பெரேரா, நுவன் குலசேகர.