மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் : சீனா!!

622

chinaஇலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கவும் அதனை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பீஜிங்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹிக்வின் யேன் இதனை கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாடு நிறைவடைந்தமை, மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பில் இதன் போது கேள்விகள் எழுப்பட்டதாக தெரியவருகிறது.

சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளின் வேறுபாடுகளுக்கு அமையவாக மனித உரிமை பாதுகாப்பு தொடர்பில் மாற்றங்கள் இருக்கலாம்.

எனினும் மனித உரிமைகளை பாதுகாத்து அவற்றை ஊக்குவிக்க அந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஏனைய நாடுகள் பயனுள்ள வகையில் உதவிகளை வழங்க வேண்டும்.

இலங்கையின் மனித உரிமை பிரச்சினையானது இந்த சந்தர்ப்பத்தில் பொதுநலவாய மாநாட்டில் பேசப்பட்ட விடயமாக இருந்தாலும் மனித உரிமைகள் தொடர்பான வாத விவாதங்களும், தொடர்பாடல்களும் நாடுகளுக்கு இடையில் இருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.