தமிழனை கரம் பிடிக்க தமிழச்சியாக மாறிய வெளிநாட்டுப் பெண்!!

773

அமெரிக்காவில் கடந்த ஆறு ஆண்டுகளாக மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மருத்துவ பெண்ணை காதலித்து தமிழக முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

திருநாவுக்கரசு என்பவரும் அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வந்த எலிசபெத் கல்லகரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

எலிசபெத் கல்லகர் மற்றும் அவரது பெற்றோர் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய விரும்பியதை அடுத்து முறைப்படி விசா பெற்று அவர்கள் குடும்பத்தினர் தமிழகம் வந்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூரில் ஊத்தங்கரை செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டத்தில் காலை திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் எலிசபெத்தின் தாய், தந்தை, உறவினர்கள் அனைவரும், தமிழகப் பாரம்பரிய முறைப்படி, பட்டு வேட்டி, சட்டை, பட்டுப்புடவை, நெற்றியில் குங்குமம், தலையில் மல்லிகை பூ வைத்து, பங்கேற்றனர்.

பட்டுப் புடவையில் மணமேடையில் வந்து அமர்ந்த மணப்பெண்ணின் கழுத்தில் முறையாக அக்னி வளர்த்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, ஜயர் வேதங்கள் முழங்க திருநாவுக்கரசு தாலி கட்டினார்.