கேரளாவில் மிருகங்களாக மாறிய மனிதர்கள் : கொடுமையான சம்பவம்!!

299

கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி விடுதியில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 28 மாணவிகளில் 13 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

மீதம் இருந்த 15 பேர் படகின் மூலம் மீட்கப்பட்டனர். நான்கு நாட்களாக அந்த விடுதியிலேயே சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ யாரும் வரவில்லை.

இந்த மாணவிகள் சிக்கிக்கொண்டிருக்கும் விடுதியில் இருந்து 10 அடியிலேயே இவர்கள் படிக்கும் கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியில்தான் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஊர் மக்கள் பலரும் மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

மாணவிகள் சிக்கிக்கொண்ட விடுதியில் மூன்று தளங்கள். அதில் முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்திருக்க இந்த மாணவிகள் அதிலேயே சிக்கிக்கொண்டுவிட்டனர். ஆனால், கல்லூரியில் தங்கவைக்கப்பட்ட மக்களோ ‘இவர்கள் நலமாக இருக்கிறார்கள், நாம்தான் இங்கு அல்லாடிக்கொண்டிருக்கிறோம்’ என்று நினைத்துக்கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று நாட்களாக சிக்கிக்கொண்ட பெண்களுக்கு உணவுகூடத் தராமல், உதவியாக வந்த உணவை அவர்களே சாப்பிட்டுள்ளனர். சரி இங்கிருந்து தப்பித்தே ஆக வேண்டும் என்று எண்ணிய மாணவிகள், ஹெலிகாப்டர் அந்த வழியாக வரும்போதெல்லாம் கூச்சலிட்டுள்ளனர்.

விடுதியில் இருக்கும் பெண்களுடன் ஒரு வெறுப்பிலேயே இருந்திருக்கிறது அந்த முகாமில் தங்கவைக்கப்பட்ட அந்தப் பகுதி மக்கள் குழு.

இந்த விடுதியில் மாநிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் மாணவிகள் கல்வி கற்றுவருகிறார்கள். எனவே இவர்கள் நமது ஊரை சேர்ந்தவர்கள் கிடையாது, என்பதுதான் அவர்களுக்கு எங்கள் மீது இருக்கும் வெறுப்பாக இருக்கலாம் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகின்றனர்.

தற்போது தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் மாணவிகள், இந்த சம்பவத்தை நினைத்து மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இந்த மாணவிகள் தெரிவித்தவை அனைத்தும் உண்மையா என்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள பெண்கள் ஆணையம் அரசை கோரியுள்ளது.