பெற்றோரை கண்கலங்க வைத்த தமிழ் சிறுமி : அப்படியென்ன செய்தார்?

316

தமிழகத்தின் மதுரையை சேர்ந்த ஐந்தாவது படிக்கும் சிறுமி தமது உயர் படிப்புக்காக சேமித்து வைத்திருக்கும் பணத்தை கேர வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கேரளா பெருவெள்ளம், உலகெங்கும் இருக்கிற மனிதத்தை உயிர்ப்பிக்கச்செய்துள்ளது. கேரளாவுக்கான உதவிகள், பல பகுதிகளிலிருந்தும் குவிந்தவண்ணம் உள்ளது.

இதில், நெகிழ்ச்சியடைய வைக்கும் பல சம்பவங்கள் நாட்டின் பல பாகங்களில் நடந்துள்ளன. விழுப்புரம் சிறுமி, சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கேரளா வெள்ள நிவாரணத்துக்கு வழங்கியது அதில் ஒன்று.

தற்போது, மதுரையைச் சேர்ந்த விக்ரமன் என்பவருடைய மகள் ஹெப்ரான் ஜோன்னா என்ற ஐந்தாவது படிக்கும் சிறுமி, தன்னுடைய உயர் படிப்புக்காக சேமித்துவைத்திருந்த 52 ஆயிரம் ரூபாயை கேரளா வெள்ள நிவாரணத்துக்காக வழங்கியிருக்கிறார்.

ஹெப்ரானுடைய குடும்பத்தினர், கேரளா வெள்ள நிவாரணத்துக்குப் பல உதவிகளையும் செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்த ஹெப்ரான், தானும் உதவி செய்தாக வேண்டுமென்று முடிவுசெய்து, சேமித்த மொத்த பணத்தையும் வழங்கியிருக்கிறார். இதற்கு அவர் பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.