திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள் : அசின் பரபரப்புத் தகவல்!!

579

asinதிருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் இந்த வழக்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது.

குறிப்பாக இந்தி நடிகர்–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள்.

இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன.

தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், இயக்குனரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர்.

அசின் இதுகுறித்து கூறும்போது இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன்சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.