என்னைப்பற்றி வதந்தி : அனுஷ்கா ஆவேசம்!!

465

anuskaதன்னைப்பற்றி வதந்திகள் பரப்பப்படுவதாக நடிகை அனுஷ்கா ஆதங்கப்பட்டார். இவரைப்பற்றி ஏற்கனவே நிறைய கிசுகிசுக்கள் வந்தன. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுடன் இணைந்து பேசப்பட்டார். ஆந்திர தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வந்தன.

அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. இந்த வயது நடிகைகள் பலருக்கு திருமணம் முடிந்து விட்டது. அனுஷ்காவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு படவிழாவுக்கு வந்த அனுஷ்காவிடம் திருமணம் பற்றி நிருபர்கள் கேட்டனர். உடனே ஆவேசமானார். அவர் அளித்த பேட்டி வருமாறு..

என்னைப்பற்றி நிறைய வதந்திகள் பரவி உள்ளன. எனது திருமணம் குறித்து என்னைவிட பத்திரிகையாளர்களுக்குதான் முழு விவரமும் தெரிந்து இருக்கிறது. நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதையும் நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரை படங்களில் பிசியாக நடிக்கிறேன். திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று அனுஷ்கா கூறினார்.