சினேகா கர்ப்பமான செய்தி உண்மையில்லை : பிரசன்னா!!

322

snehaநடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் சினிமாவில் சில படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சினேகா கர்ப்பமாக இருப்பதாக இணையதளங்களில் செய்தி வெளியாகி பரபரப்பாகி உள்ளது. இந்த செய்தி உண்மையில்லை என்று பிரசன்னா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது..

பத்திரிக்கை மற்றும் சில ஊடகங்களில் சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என வெளிவரும் செய்திகள் உண்மையில்லை. தொடர்ந்து நாங்கள் படங்களில் நடித்து வருவதால் இப்போதைக்கு குழந்தை பிறப்பை தள்ளி வைத்திருக்கிறோம். அப்படி ஒரு சுபசெய்தி இருந்தால் பத்திரிகையாளர்களான உங்களை அழைத்துத்தான் முதலில் பகிர்ந்து கொள்வோம் என்று கூறியுள்ளார்.

சினேகா தற்போது பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவாகி வரும் உன் சமையல் அறையில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கு படமொன்றிலும் நடித்து வருகிறார். பிரசன்னா கல்யாண சமையல் சாதம், புலிவால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.