நிலநடுக்கத்தை கண்டு அஞ்சாத ஜில்லா படக்குழு!!

253

jillaவிஜய்-காஜல் அகர்வால் நடிப்பில் புதுமுக இயக்குனர் நேசன் இயக்கி வரும் படம் ஜில்லா. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கிறார். மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ், மஹத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றை படமாக்குவதற்காக இப்படக்குழு சமீபத்தில் ஜப்பான் பறந்து சென்றது. அவர்கள் அங்கு சென்றிருந்தபோது ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து பதறிப்போன தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி படக்குழுவினை உடனடியாக திரும்பி வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் அப்போது ஜப்பானில் நிலவி வந்த வானிலை வருடத்துக்கு ஒருமுறைதான் வரும். அதுதான் படத்தின் பாடலுக்கு தேவையான சூழ்நிலை என்பதால் பாடலை எடுத்துவிட்டுத்தான் திரும்பி வருவோம் என விடாபிடியாக படக்குழு மறுத்துவிட்டதாம். இதையடுத்து பாடலை படமாக்கிய பிறகே படக்குழுவினர் இந்தியா திரும்பியிருக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் பொங்கலுக்கு வெளியிடவிருக்கின்றனர்.