வவுனியாவில் தரம் 10 கல்வி கற்கும் மாணவனைக் காணவில்லை என முறைப்பாடு!!

620

வவுனியாவின் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை நேற்று மாலை முதல் காணவில்லை என்று பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 5மணிமுதல் வவுனியா தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனைக் காணவில்லை என்று நேற்று இரவு 9 மணியளவில் பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

அம்முறைப்பாட்டில் வீட்டிலிருந்து தனது உடுதுணிகள் சிலவற்றையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்தி

காணாமல்போன மாணவன் உறவினர் ஒருவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டு தந்தையால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.