உண்ணாவிரதம் மேற்கொண்ட இலங்கை அகதி வைத்தியசாலையில் அனுமதி!!

562

hospitalசெங்கல்பட்டு சிறப்பு முகாமில் 4வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட ஈழத்தமிழ் அகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அகதிகளுள் ஒருவரான அருள்ராஜ் (51) தன்னை முகாமில் இருந்து விடுவித்து தனது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரி 2வது முறையாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

ஏற்கனவே உண்ணாவிரதம் மேற்கொண்ட இவருடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் ஒரு மாதமாகியும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் மீண்டும் 2வது முறையாக உண்ணாவிரதம் மேற்கொண்ட இவர், நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.