இரு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்!!

1132

நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற ஏறாவூர் மதரஸாவில் கல்வி பயிலும் மணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஜெயந்தியாவ பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் தக்காப் கிராமத்தினைச் சேர்ந்த 23 வயதுடைய முகமட் அனஸ் முகமட் சாகீர் என்பவரும் அவரது நண்பரான மிச்சி நகர் ஏறாவூரைச் சேர்ந்த, 22 வயதுடைய முகம்மது அசனார் முகம்மது சாதீக் என்ற இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு பேரும் ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள மர்கஸ் மத்ரசாவில் இறுதியாண்டில் கல்விபயிலும் மாணவர்கள் ஆவர். குறித்த நால்வரில் இருவரை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.