வவுனியாவில் உள்ள காப்பகம் ஒன்றில் இளம் யுவதி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி!!

683

வவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் வசித்து வந்த இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த காப்பகத்தில் வசித்து வந்த 18 வயதுடைய பெண் கடந்த 28.08.2018 அன்று இரவு 9 மணியளவில் தனது கழுத்தினை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு இரவு 9.30 மணியளவில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலையின் விடுதி 2 இல் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

தற்கொலைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.