சமூக வலைத்தளங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : பிரதமர் ரணில்!!

333

முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் உட்பட புதிய ஊடகங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஆரம்பமான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பிரதான உரையை நிகழ்த்தும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள சமூக வலைத்தளங்கள் உட்பட புதிய ஊடகங்கள் பாதுகாப்புக்கு மரபுசாராத ஒரு அச்சுறுத்தல். முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தும் சக்திகளாக மாறியுள்ளன.

இந்த ஊடகங்கள் மூலம் அரசுகளை ஸ்திரமற்ற நிலைமைக்கு உள்ளாக்க முடியும். துனிசியா, எகிப்து போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணம். பல்வேறு பரிமாணங்களில், உலக சிக்கல்களை ஏற்படுத்தி, நாடுகளை பலவீனப்படுத்த இந்த சக்திகளுக்கு முடியும். இதனால், இந்த அச்சுறுத்தலை தடுக்க வலுவான வழிமுறைகள் அவசியம்.

உலக பாதுகாப்புக்கு ஏதுவான மரபுசார்ந்த மற்றும் மரபுசாரா அச்சுறுத்தல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்