அந்த மூன்று பேரும் மோசமாக நடந்துகொண்டார்கள் : உயிரை விட்ட 17 வயதுச் சிறுவனின் இறுதி வார்த்தைகள்!!

543

இந்தியாவின் மகராஷ்டிராவில் போதை மருத்துகளை பள்ளியில் விற்கும்படி படி மாணவர் மிரட்டப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முகமது ஜயின் என்ற 17 வயது மாணவர் இரு தினங்களுக்கு முன்னர் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்தார்.

இதையடுத்து முகமதின் தந்தை ஜகீர் அளித்த புகாரின் பேரில் சாய்நாத், முருகன், அனிகிட் ஆகிய மூன்று இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

முகமது மரணம் குறித்து ஜகீர் கூறுகையில், மூன்று இளைஞர்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக முகமது என்னிடம் கூறினார்.

நான் மும்பையில் இருந்து வந்தபிறகு இது குறித்து பொலிசில் புகார் கொடுக்க இருந்தேன், அதற்குள் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இறப்பதற்கு முன்னர் உறவினரிடம் சில விடயங்களை முகமது கூறினார்.

அதாவது, சாய்நாத், முருகன், அனிகிட் ஆகிய மூவரும் தன்னிடம் போதை மருந்துகளை கொடுத்து அதை பள்ளியில் விற்று தரும்படி அடித்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார். இதன்பின்னரே தற்கொலை செய்து கொண்டார்.

என் மகன் போல பலரின் வாழ்க்கையை மூவரும் நாசமாக்குவதற்கு முன்னர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.