மர்மமான முறையில் உயிரிழந்த தந்தை, மகளின் சடலம் மீட்பு!!

950

மஹியங்கனையில் உயிரிழந்த நிலையில் தந்தை மற்றும் மகள் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இருவரும் தங்கியிருந்த வீட்டிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

31 வயதான சன்ஜீவ ருத்ரிகோ மற்றும் அவரது 11 வயதான மகள் கயானி உதேஷிகா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.