காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

524

தமிழகத்தில் தகாத உறவை கண்டித்த கணவனை வெட்டி கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் அருகே உள்ள அன்னஞ்சியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரின் மனைவி லட்சுமி(33). இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமாணது.

லட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்து(26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது.

இதையறிந்த முனியாண்டி இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் கள்ள உறவை முறித்துக்கொள்ள மறுத்த லட்சுமியும், முத்துவும் இவர்களுக்கு தடையாக இருக்கும் முனியாண்டியை கொல்ல திட்டமிட்டனர்.

அதன் படி முனியாண்டி தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டில் புகுந்த இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அல்லிநகரம் போலீஸார் கடந்த 2015ம் ஆண்டு ஜீன் மாதம் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நீதிபதி சீனிவாசன் குற்றவாளிகள் முத்து, லட்சுமி இருவருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.