சாவகச்சேரி திருட்டுத் தொடர்பாக கைதான இருவருக்கும் பிணை : ஒருவர் பல்கலைக் கழக மாணவன்!!

818

courtயாழ்ப்பாணம் – சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள கைத்தொலைபேசி விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபர்கள் இருவரையும் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற திருட்டுத் தொடர்பாக சங்கானை, பண்டைத்தரிப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவரைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி இரவு குறித்த விற்பனை நிலையத்துக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்து 30 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.

திருட்டுத் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், திருட்டுப்போன தொலைபேசிகளில் ஒன்று இயங்கியமை தெரியவந்தது. குறித்த தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்த பொலிஸார் சங்கானையிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரைக் கைது செய்தனர்.

அவர் வழங்கிய தகவலின்படி மற்றுமொரு பண்டைத்தரிப்புவாசி நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பல்கலை மாணவர் என்பதுவும் தெரியவந்துள்ளது.