தன்னுடைய 4 மாத மகளுக்கு தந்தை ஒருவர் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கிறிஸ்டோபர் பிரவுன் என்ற ட்விட்டர் பயனாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 4 மாத மகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை போன்ற வீடியோவினை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இது மிகவும் இனிமையான விஷயம். நான் என் மகளுக்கும், என் குடும்பத்திற்கும் இடையில் ஒரு பிணைப்பு தருணத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக இது அமைந்தது என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவானது தற்போது 160,000 பயனாளர்களால் விருப்பம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடியோவினை பலரும் பகிர்ந்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதில் ஒரு பெண், இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என கோபமாக கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் கொடுத்த கிறிஸ்டோபர், நான் ஒன்றும் வேண்டுமென்று செய்யவில்லை. என் மகளுடன் விளையாடி கொண்டிருக்கும்போது, அவர் திடீரென இப்படி செய்துகொண்டே உறங்கிவிட்டாள் என பதிவிட்டுள்ளார்.
இதை பற்றி மற்றொரு பெண், சில நேரங்களில் குழந்தைகள் பசிக்காக மட்டும் முலைக்காம்புகளைக் தேடுவதில்லை. அவர்களின் ஆறுதலுக்காகவும் தேடுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.