வவுனியா கனகராயன்குளத்தில் நேற்று (12.09.2018) காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் கனகராயன்குளம் மக்கள் வங்கிக்கு அருகே காணப்படும் வீதி வளைவில் சாரதியில் கட்டுப்பாட்டையிழந்து வீதியிலிருந்து கீழிறங்கி மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் விபத்தின் காரணமாக சுமார் நான்கு மணித்தியாலத்திற்கு மேலதிகமாக கனகராயன்குளம் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















