புதூர் நாகதம்பிரான் ஆலய 108 அடி நவதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டல்! (படங்கள்,வீடியோ)வரலாற்று சிறப்புமிக்க புதூர்  ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய 108 அடி நவதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் 108 அடி நவதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆலய பிரதம குருவினால் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


வவனியா மாவட்டத்தில் அதிக உயரமுள்ள இராஜகோபுரமாக அமையவுள்ள இக்கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, மற்றும் ஆலய நிர்வாகிகள், பத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.