வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவலநிலை : சமூக வலைத்தளங்களில் பரவலாகும் புகைப்படங்கள்!!

1036

வவுனியா பொதுவைத்தியசாலையில் விபத்துப் பிரிவு விடுதியில் நோயாளர்கள் உறங்குவதற்கு கட்டில்கள் மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் பெரும் அவதியுறும் காட்சி புகைப்படங்களை இளைஞன் ஒருவர் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளதுடன் மக்கள் பிரதிநிகளிடமும் சரமாரியான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

இதேவேளை குறித்த விடுதியின் ஆண் பெண் என தனி பிரிவுகள் இருந்தும் இப்புகைப்படங்களை நோக்குகையில் இருபாலாரையும் ஒரே பகுதியில் நிலத்தில் உறங்கும் காட்சிகளும் தென்படுகின்றன

எனவே இதற்கு உரிய அதிகாரிகள், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக விரைந்து செயற்பட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கேட்டுக்கொள்கின்றனர்.