அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்!!

259

அவுஸ்திரேலியாவின் முக்கிய அரசியல்வாதிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள இலங்கையர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையான மொஹமட் நிசாம்டீன் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நபருக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என சிட்னி புலனாய்வு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். அவரது மாணவர் விசாக்காலம் நிறைவடைகின்றது. எனினும், அந்நாட்டு அதிகாரிகள் அவருக்கு நீதி நடவடிக்கைக்கான விசாவை வழங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை், குறித்த நபர் கைது செய்யப்பட்டு 20 நாட்கள் வரையில் கடந்துள்ள நிலையில், இன்னும் அவரை அவரது குடும்பத்தாருடன் தொடர்புகொள்ள அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இளைஞருக்கு நீதிகோரி கொழும்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.