வவுனியாவில் ஆவணமின்றி 20 வருடமாக தங்கியுள்ளவர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கவேண்டாம் : வீடமைப்பு அதிகாரசபை அறிவிப்பு!!

688

வவுனியா காத்தார் சின்னக்குளம் வீடமைப்பு திட்டம் பகுதியில் தங்கியுள்ளவர்களின் காணி தேசிய வீடமைப்பு அதிகார சபையினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களுக்கான முழுப் பெறுமதியையும் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் செலுத்தியதும் அவர்களுக்கான காணி உறுதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் வழங்கப்படும்.

மேலும் இவ்வீடமைப்புத்திட்டத்தில் பொதுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் மற்றும் ஏனைய வெற்றுக்காணிகள் யாவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாகும்.

அக்காணியில் அத்துமீறிக் குடியிருப்போருக்கு அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்கவோ அல்லது அவர்களுக்கு அரசாங்கத்தினால் உதவிகள் எதனையும் வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு ஆவன செய்யுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வவுனியா அலுவலகத்திலிருந்து கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டிற்கு பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலரையோ குற்றச்சாட்டு முன்வைக்க முடியாது. எனவே இதற்கு முழுப் பொறுப்பினையும் தேசிய வீடமைப்பு அதிகார அபிவிருத்தி சபையினரே பொறுப்பேற்பதுடன் கடந்த 20 வருடமாக குடியிருக்கும் குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்படுவதுடன் வீட்டுத்திட்டங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.