இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் லம்பெத் என்ற இடத்தில் இருந்து ஒரு தன்னார்வ தொண்டு அமைப்புக்கு பெண் ஒருவர் தொலைபேசியில் அழுது கொண்டே பேசினார்.
தானும் மற்றும் இரண்டு பெண்களும் ஒரு வீட்டில் 30 ஆண்டுகளாக அடிமையாக அடைத்து வைக்கப்பட்டு கொடுமைகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்து வருவதாக கூறினார்.
அதைத்தொடர்ந்து இந்த அமைப்பினர் பொலிஸாரின் உதவியுடன் அந்த வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கு அடிமைகளாக நடத்தப்பட்ட 3 பெண்களை மீட்டனர்.
அவர்களில் 69 வயது மலேசிய பெண், 57 வயது அயர்லாந்து பெண் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்ணும் அடங்குவர். வீட்டு வேலைக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் 30 ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்படுவதாக கூறினர்.
அதைத்தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளர் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 60 வயது முதியவர்கள் ஆவர்.