2014 வரவு செலவுத் திட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் படி பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் சங்கத் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.