கல்கிஸ்ஸை, ஹோட்டல் வீதி பகுதியில் முச்சக்கர வண்டியை பயன்படுத்தி விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் இந்த நடமாடும் விபச்சார விடுதியை நடத்திய ஒருவரும், அவருக்கு உதவி வழங்கிய மூன்று பெண்கள் உட்பட ஐவருமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.