அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றுக்கான விலை அதிகரிப்பு!!

490

foodஇம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்படி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

புதிய வரி திருத்தங்களுக்கு அமைய சீனி, பருப்பு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், வெங்காயம் உள்ளிட்ட இறக்குமதி உணவுப் பொருட்கள் பலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் சீனி ஒரு கிலோ கிராமுக்கான வரி 30 ரூபா வரையும், ஒரு கிலோ கிராம் தகரத்தில் அடைக்கப்பட்ட மீனுக்கான வரி 102 ரூபா வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பட்டர் ஒரு கிலோ கிராமுக்கான வரி 880 வரையிலும், யோகட் ஒரு கிலோகிராமுக்கான வரி 625 ரூபா வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.



இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெள்ளைப் பூண்டுக்கான வரி 40 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒரு கிலோ கிராம் பருப்புக்கான வரி 18 ரூபாவிலிருந்து 22 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் பழவகைகளுக்கான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. ஒரு லீட்டர் பெற்றோலுக்கான வரி 27 ரூபாவினாலும் ஒரு லீட்டர் டீசலுக்கான வரி 03 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபானம் தெரிவித்துள்ளது.