நீச்சல் போட்டியில் இளவயதினருடன் போட்டியிட தயாராகும் மூதாட்டி!!

445

Swapna-Waniமும்பையில் இன்று நடக்கவுள்ள 6 கி.மீ கடல் நீச்சல் போட்டியில் 60 வயதான ஸ்வப்னா வாணி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

சிறு வயதிலிருந்து நீச்சல் போட்டிகளில் பங்கேற்கும் வாணி 74 விருதுகளைப் பெற்றுள்ளார். நாற்பது வயதைத் தாண்டி விட்டாலே வாழ்க்கையே அவ்வளவு தான் என, நினைத்து, பலரும் சோம்பிக் கிடக்கையில் 60 வயதில் நாட்டில் எங்கு நீச்சல் போட்டி நடந்தாலும், அதில் ஆர்வமாக பங்கேற்று விருதுகளைக் குவித்து வருகிறார், வாணி.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மும்பையில் இன்று நடைபெற உள்ள கடல் நீச்சல் போட்டியில், வாணியும் பங்கேற்கிறார். கடலில் 6 கி.மீ நீச்சல் அடிக்க வேண்டிய இந்த போட்டியில் 16 வயது முதல் பல வயதினரும் பங்கேற்கின்றனர். அவர்களுடன் வாணியும் போட்டியிடுகிறார். எப்படியும், விருதை வென்றே தீருவேன் என, உறுதியாக கூறுகிறார்.

வாணி, சிறுவயதில் இருந்தே நீச்சல் அடிக்கவில்லை. அவருக்கு 35 வயதாக இருக்கும் போது, அவரின் இரு மகன்களுக்கு, நீச்சல் பயிற்சி அளிப்பதற்காக நீச்சல் குளத்திற்கு கூட்டிச் சென்றவர், அங்கேயே தானும் நீச்சல் பயிற்சி பெற்று சில ஆண்டுகளில் நீச்சல் வீராங்கனையாக மாறிவிட்டார்.



அவரின் மகன்கள் நீச்சலை மறந்து வேறு வேலைகளில் கவனமாக இருக்க அவரோ இன்னும் தண்ணீரும் நீச்சலுமாக இருக்கிறார்.
வெளிநாடுகளில் நடக்கும் நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் வாணி.