கொதித்தெழுந்த அழகக சங்கங்களின் சம்மேளனம் : சலூன், லோன்றியினால் வசமாக சிக்கிய உறுப்பினர்!!

670

வடமாகாண சபை கூட்டத்தில் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் முகமான வடமாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையாடல்களுக்கு வடமாகாண அழகக் சங்கங்களின் சம்மேளனம் தனது கண்டத்தினை தெரிவித்துள்ளது.

வடமாகாண அழக சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் க.நாகராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,

”வேலியே பயிரை மேய்வது போல” எமக்காக எம்மால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைக் கூட்டத்தில் எம் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி சம்பந்தமாகக் கூடி முடிவெடுக்க வேண்டிய கூட்டங்களில் அவர்களது மறுமுகங்களை எமக்கு காட்டி நிற்கின்றனர்.

அண்மையில் நடைபெற்ற மாகாண சபைக் கூட்டத்தில் திரு.சிவக்கொழுந்து அகிலதாஸ் அவர்கள், ‘சலூன் சென்று உடுப்பு அயன் பண்ணவா? லோன்றியில் சென்று முடி வெட்டவா? ‘ என எமது தொழிலாளர்களை இழிவுபடுத்தும் முகமாக உரையாடியுள்ளார்.

எமக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய உறுப்பினர்களே எமது தொழிலாளர்களை கேவலப்படுத்தியுள்ளனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மாகாண சபைக் கூட்டங்களில் அபிவிருத்தியைப் பற்றிக் கதைப்பதா? அல்லது பிற சமூகங்களை இழிவுபடுத்துவதா? எமது தமிழ் பேசும் உறவுகளே சாதிய அடிப்படையில் கொள்ளை கொண்டவர்களாக இருந்தால் இவர்களா எமது பாதுகாவலர்கள்? இப்படிப்பட்ட செயற்பாடுகளை எமது நிறுவனம் வன்மையாகக் கண்டிக்கிறது. என அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.