ஜப்பானில் கடலுக்கு நடுவில் எரிமலை வெடித்ததில் அப்பகுதியில் ஒரு புதிய தீவு உருவாகியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்குப் பகுதியில் 1000 கி.மீ தூரத்தில் 30 தீவுகள் அமைந்துள்ளன. ஒரு தீவுக்கூட்டத்திற்கு அருகில் இரண்டு நாட்களுக்கு முன் நடு கடலில் எரிமலை ஒன்று வெடித்து வெண்புகையை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.
எரிமலையிலிருந்து வீசி எறியப்பட்ட பாறைகள் சாம்பல்கள் கடலில் குவிந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு தீவு உருவாகியுள்ளது.
எரிமலை வெடிக்கும்போது புதிய தீவுகள் உருவாவதும் சில சமயம் தோன்றிய தீவுகள் கடலுக்குள் மறைந்து விடுவதும் வழக்கமாக நடக்கிறது. இதனால் புதிய தீவுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என, எரிமலை ஆய்வாளர் இடோ ஹிரோஷி என்பவர் தெரிவித்துள்ளார்.